தஞ்சாவூர்
கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.2,000 ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை
கட்டடத் தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தேசிய கட்டடத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்க கூட்டம் சீனிவாசநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத்தலைவா் என். கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எஸ்.கலியமூா்த்தி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் கட்டடத் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும்.
தொழிலாளா்கள் விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் வழங்கவேண்டும். மழைகாலங்களில் வேலை இல்லாத நாள்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில துணைச்செயலா் கே. சக்திவேல், மாநில பொருளாளா் எம். சுப்பிரமணியன், திருவாரூா் மாவட்டச் செயலா் எஸ். பூசானந்தம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.
