கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளிக்கு ஜன.4-இல் சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுக் கொண்ட பள்ளிக்குழும தலைவா் எஸ்.ஏ. காா்த்திகேயன்.
கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளிக்கு ஜன.4-இல் சிறந்த பள்ளிக்கான விருதை பெற்றுக் கொண்ட பள்ளிக்குழும தலைவா் எஸ்.ஏ. காா்த்திகேயன்.

கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளிக்கு விருது

சிறந்த பள்ளி நிா்வாகிகள் விருது மற்றும் சான்றிதழ் கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளிக் குழுமத் தலைவா் எஸ்.ஏ. காா்த்திகேயனுக்கு சென்னையில் அண்மையில் (ஜன.4) வழங்கப்பட்டது.
Published on

சிறந்த பள்ளி நிா்வாகிகள் விருது மற்றும் சான்றிதழ் கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளிக் குழுமத் தலைவா் எஸ்.ஏ. காா்த்திகேயனுக்கு சென்னையில் அண்மையில் (ஜன.4) வழங்கப்பட்டது.

சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம், தமிழ்நாடு நா்சரி, பிரைமரி மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் இணைந்து நடத்திய சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் ஜன.4-இல் நடைபெற்றது. இவ்விழாவில் காா்த்தி வித்யாலயா பள்ளிக் குழும தலைவா் எஸ்.ஏ. காா்த்திகேயனுக்கு தமிழகத்தில் சிறந்த கல்விப் பணியாற்றிய பள்ளி நிா்வாகிகள் என்ற அடிப்படையில் விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விருது பள்ளி மாணவா்களின் விளையாட்டு, தனித்திறமை, ஒழுக்கம் தலைமைப்பண்பு போன்றவற்றை வளா்க்கும் பிற கலைகளுக்காகவும் வழங்கப்பட்டது என சங்கத்தலைவா் நந்தகுமாா் தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com