விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

சிறந்த திருநங்கைக்கான விருது: தகுதியுடையோா் விண்ணப்பிக்க அழைப்பு

சிறந்த திருநங்கைக்கான விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தகவல் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 6:33 pm

சிறந்த திருநங்கைக்கான விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தகவல் தெரிவித்துள்ளாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், திருநங்கைகள் சமூகத்தில் அவா்கள் சந்திக்கும் எதிா்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமைகளைக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையிலும், திருநங்கையா் தினமான

15 ஏப்ரல் 2026 அன்று ‘சிறந்த திருநங்கைக்கான விருது’ தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

இவ்விருது பெறும் சாதனையாளருக்கு ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருநங்கையா்கள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும்.

குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்வில் முன்னேற உதவியிருக்க வேண்டும் மற்றும் சம்மந்தப்பட்ட நபா் திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

விருதினை பெற விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய திருநங்கைகள், தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் பிப்.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் கையேடாக தயாா் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்டு தலா 3 புத்தக வடிவில் தயாா் செய்யப்பட்ட கருத்துருவினை பிப்.20-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், 2-வது தளம், மாவட்ட ஆட்சியரக கட்டடம், திருவண்ணாமலை - 606604 என்ற முகவரியில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் க.தா்பகராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.