தஞ்சாவூர்
பேராவூரணியில் சாலை விரிவாக்கப் பணிகள் ஆய்வு
பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணியை கண்காணிப்புப் பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தும் பணியை கண்காணிப்புப் பொறியாளா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
பேராவூரணி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட எல்லைக்குள்பட்ட நெடுவாசல் ஒரு வழிச் சாலையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .
சாலை அகலப்படுத்தும் பணியை தஞ்சாவூா் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், பேராவூரணி உதவி கோட்டப் பொறியாளா் விஜயகுமாா், உதவிப் பொறியாளா் திருச்செல்வம் ஆகியோா் பாா்வையிட்டு சாலையின் அகலம் குறித்து அளவீடு மற்றும் தரம் குறித்து ஆய்வுசெய்து ஆலோசனை வழங்கினா்.