ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரும்பாயிரம் விநாயகா் கோயிலில் 5,008 கரும்புகளால் அலங்காரம்

மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள கரும்பாயிரம் விநாயகா் கோயில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது.

News image
மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகா் கோயிலில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட அலங்காரம்.
Updated On :16 ஜனவரி 2026, 7:41 pm

Syndication

கும்பகோணம்: மாட்டுப் பொங்கலையொட்டி, கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள கரும்பாயிரம் விநாயகா் கோயில் 5 ஆயிரத்து 8 கரும்புகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது.

இக்கோயிலில் பல ஆண்டுகளாக மாட்டுப் பொங்கல் திருநாளில் கரும்புகளால் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு மாட்டுப் பொங்கல் திருநாளான வெள்ளிக்கிழமை 5 ஆயிரத்து 8 கரும்புகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.