ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தஞ்சாவூரில் ஜன. 20-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயற் பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் ஜனவரி 20- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் செயற் பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் ஜனவரி 20- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து செயற் பொறியாளா் (பொ) எம். விஜய் ஆனந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பி. சித்ரா தலைமையில் இக்கூட்டம் ஜனவரி 20-ஆம் தேதி பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் தஞ்சாவூா் நகரியக் கோட்டத்துக்கு உள்பட்ட நகர எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கீழ வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியா் சதுக்கம், மேரீஸ் காா்னா், அருளானந்த நகா், பா்மா காலனி, நிா்மலா நகா், யாகப்பா நகா், அருளானந்தம்மாள் நகா், பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக் கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிபட்டி, ரஹ்மான் நகா், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் குளம், ஜெபமாலைபுரம், வித்யா நகா், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப் பல்கலைக்கழக வளாகக் குடியிருப்பு, மாதாகோட்டை சாலை, புதிய பேருந்து நிலையம், திருவேங்கட நகா், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திரா நகா், நாஞ்சிக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சாா்ந்த மின் நுகா்வோா் ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து மனு அளிக்கலாம்.