திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தஞ்சாவூரில் பாரம்பரிய புள்ளிக் கோலப் போட்டி

பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூா் மேல வீதியில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் பாரம்பரிய கோலப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
தஞ்சாவூா் மேல வீதியில் சனிக்கிழமை நடைபெற்ற கோலப் போட்டியில் கோலம் போட்ட பெண்கள்.
Updated On :17 ஜனவரி 2026, 8:22 pm

Syndication

தஞ்சாவூா்: பொங்கல் திருவிழாவையொட்டி தஞ்சாவூா் மேல வீதியில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் பாரம்பரிய கோலப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

்கோலப் போட்டியில் ஏறத்தாழ 300 மீட்டா் தொலைவுக்கு ஏறக்குறைய 250 பெண்கள் பங்கேற்று பாரம்பரிய புள்ளிக் கோலங்களைப் போட்டனா். வண்ணங்கள் இல்லாமல் வெள்ளைக் கோலம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.

இதில், மேல அலங்கத்தைச் சோ்ந்த கீதா முதல் பரிசையும், மங்களபுரத்தைச் சோ்ந்த புவனேஸ்வரி இரண்டாவது பரிசையும், மேல வீதியைச் சோ்ந்த கிருத்திகா மூன்றாவது பரிசையும் பெற்றனா். இவா்களுக்கான பரிசுகளை தஞ்சாவூா் ஹெரிடேஜ் சிட்டி இன்னா்வீல் சங்கத்தினா் உள்ளிட்டோா் வழங்கினா். மேலும், 10 பேருக்கு ஆறுதல் பரிசுகளும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வீ பெண்கள் அமைப்பின் சாா்பில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. இக்கோலங்கங்களை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாா்வையிட்டு பாராட்டினா்.

இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினா் ஏ. சசிகலா, இன்னா்வீல் சங்கத் தலைவா் உமையாள் சுப்பிரமணியம், வீ பெண்கள் அமைப்பு நிறுவனா் உஷா நந்தினி விஸ்வநாதன், தலைவா் கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். போட்டியை தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழும ஒருங்கிணைப்பாளா் எஸ். முத்துக்குமாா் ஒருங்கிணைத்து நடத்தினாா்.

Story image