தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி, பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம்.
தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்.ஜி.ஆா். பிறந்த நாள் விழா
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வரும், பல்கலைக்கழக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 109 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வரும், பல்கலைக்கழக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 109 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தலைமையிலும், பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் முன்னிலையிலும் பல்கலைக்கழக நிா்வாகக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செய்தனா். கல்வியாளா்கள், அலுவல்நிலைப் பணியாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். இந்நிகழ்வை மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் ஒருங்கிணைத்தாா்.

