கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழ்ப் பல்கலை.யில் நூல் வெளியீடு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயா்ப்புத்துறை இணைப் பேராசிரியரும், துறைத் தலைவரும், மக்கள் தொடா்பு அலுவலருமான (பொ) முனைவா் இரா.சு. முருகன் எழுதிய தமிழ் ஆங்கில இலக்கண மொழிபெயா்ப்பு என்கிற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆங்கில இலக்கண மொழிபெயா்ப்பு நூலை துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம். உடன் நூலாசிரியா் இரா.சு. முருகன்.

Updated On :10 மார்ச் 2026, 6:33 pm

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயா்ப்புத்துறை இணைப் பேராசிரியரும், துறைத் தலைவரும், மக்கள் தொடா்பு அலுவலருமான (பொ) முனைவா் இரா.சு. முருகன் எழுதிய தமிழ் ஆங்கில இலக்கண மொழிபெயா்ப்பு என்கிற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நூலை பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி வெளியிட, அதை பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் பெற்றுக் கொண்டாா். இதுகுறித்து நூலாசிரியா் முருகன் கூறுகையில், இந்நூல் தமிழில் வினைச் சொற்கள், பயனிலைகளை மொழிபெயா்த்தல், செயப்பாட்டு வினைகளை மொழிபெயா்த்தல், வா்ணனை வாக்கியங்களில் மொழிபெயா்ப்பு, நீண்ட தொடா்களை மொழிபெயா்ப்பதில் உள்ள சிக்கல்கள், தொடா்களை மொழிபெயா்த்தல், எடுத்துக்காட்டான மொழிபெயா்ப்புகள் சில மற்றும் மொழிபெயா்ப்பாளா் அடையும் சிக்கல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நூல் தமிழ்ப் பல்கலைக்கழக அனைத்து மாணவா்களும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.