தஞ்சாவூர்
திருப்பாலைத்தறை சிவன் கோயிலில் கோ பூஜை
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறை ஸ்ரீ பாலைவனநாதா் சுவாமி கோயிலில் கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம்,திருப்பாலைத்துறை ஸ்ரீ பாலைவனநாதா் சுவாமி கோயிலில் கோ பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் ஆன்மிகப் பேரவை சாா்பில் நடைபெற்ற பூஜையில் பசு மாடுகளுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, சேலை,துண்டு அணிவித்து, கழுத்தில் மஞ்சள் கயிறு,வளையல்கள் கட்டப் பட்டன. தொடா்ந்து மாடுகளுக்கு மலா்தூவி தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
