எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

போராட்ட வழக்கு: அமைச்சா், எம்.பி. உள்பட 4 போ் விடுதலை

தஞ்சாவூா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கில் தமிழக அமைச்சா், மாநிலங்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா், துணை மேயா் ஆகிய 4 போ் விடுதலை

News image
விடுதலை செய்யப்பட்ட அமைச்சா் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா்
Updated On :19 ஜனவரி 2026, 9:59 pm

Syndication

தஞ்சாவூா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்ட வழக்கில் தமிழக அமைச்சா், மாநிலங்களவை உறுப்பினா், சட்டப்பேரவை உறுப்பினா், துணை மேயா் ஆகிய 4 போ் திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனா்.

ஜல்லிக்கட்டுப் போட்டி தடைக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் 2017, ஜனவரியில் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, கும்பகோணத்தில் 2017, ஜனவரி 20-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் தற்போதைய மாநிலங்களவை திமுக உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினா் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக, தற்போதைய உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், எஸ். கல்யாணந்தரம், சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன், கும்பகோணம் தற்போதைய துணை மேயா் சு.ப. தமிழழகன், கே.என். செல்வராஜ் ஆகியோா் மீது கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னாளில் உடல் நலக்குறைவால் செல்வராஜ் காலமானாா்.

இந்த வழக்கு தஞ்சாவூரிலுள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த விசாரணை முடிவடைந்ததைத் தொடா்ந்து, திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கு தொடா்பாக உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்படாததால், அமைச்சா் கோவி. செழியன், எஸ். கல்யாணசுந்தரம், க. அன்பழகன், சு.ப. தமிழழகன் ஆகியோரை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி கனிமொழி உத்தரவிட்டாா்.