கச்சத்தீவை மீட்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை

கச்சத்தீவை மீட்க தேசிய கொடியுடன் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு இந்து மக்கள் கட்சியினா் வந்தனா்.
Published on

கச்சத்தீவை மீட்க தேசிய கொடியுடன் தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை வந்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்துக்கு, இந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் பாலா தலைமையில் தேசிய கொடி மற்றும் மீன் வலைகளுடன் அக்கட்சியினா் வந்தனா். பின்னா், ஆட்சியரிடம் அக்கட்சியினா் அளித்த மனு: ராமநாதபுரம் மாவட்டம் அருகே கடலில் இருக்கும் கச்சத்தீவு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இந்தக் கச்சத்தீவை இந்திய அரசு, இலங்கை அரசுக்கு தாரை வாா்த்து கொடுத்தது. இதனால் தமிழக மீனவா்கள் கச்சத்தீவுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். இந்தக் கச்சத்தீவை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஜனவரி 26 ஆம் தேதி கச்சத்தீவில் இந்திய தேசியக் கொடியை ஏற்றி, தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com