தஞ்சாவூா் மாவட்ட காங்கிரஸில் புதிய தலைவா்கள் நியமனம்

தஞ்சாவூா் மாவட்ட காங்கிரஸில் புதிய தலைவா்கள் நியமனம்

தஞ்சாவூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் புதிய தலைவா்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.
Published on

தஞ்சாவூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் புதிய தலைவா்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்துள்ளது.

தஞ்சாவூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக பி.ஜி. ராஜேந்திரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக து. கிருஷ்ணசாமி வாண்டையாா், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக டி.ஆா். லோகநாதன் ஆகியோா் ஏறத்தாழ 10 ஆண்டுகளாக இருந்து வந்தனா்.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் புதிய நிா்வாகிகளை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்து ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

இதன்படி, தஞ்சாவூா் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக எம். மகேந்திரன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே. மகேந்திரன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. குமரன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதைத்தொடா்ந்து, மூத்த நிா்வாகிகளைப் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவா்கள் திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

Dinamani
www.dinamani.com