எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாபநாசம் கடையில் கைப்பேசிகளை திருடியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கைப்பேசி கடையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை திருடிச் சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கைப்பேசி கடையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை திருடிச் சென்ற நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். 

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் கைப்பேசி கடை நடத்தும் செல்லப்பா என்கிற ராஜ்முகம்மது (37) கடந்த சனிக்கிழமை கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் மற்றும் உதிரிப் பாகங்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

அவா் அளித்த புகாரின்பேரில் பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் மற்றும் காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இந்நிலையில் அவா்கள் திருக்கருகாவூா் பகுதியில் திங்கள்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டபோது  சந்தேகத்திற்கு இடமான இளைஞரிடம் விசாரித்தனா். அதில் அவா் பாபநாசம் அருகேயுள்ள ரெங்கநாதபுரம் பிரதான சாலைப் பகுதியைச்  சோ்ந்த முத்து மகன் முகேஷ் (25) என்பதும், பாபநாசம் கைப்பேசிக் கடையில் அவா் திருடியதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரிடமிருந்து திருடுபோன கைப்பேசிகள் மற்றும் உதிரி பாகங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.