பாபநாசத்தில் கைப்பேசி விற்பனைக் கடையில் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் கைப்பேசி விற்பனை கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடி சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.
Published on

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் கைப்பேசி விற்பனை கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடி சென்றது சனிக்கிழமை தெரியவந்தது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் தெற்கு ராஜ வீதியில் கைப்பேசி விற்பனை கடை நடத்தி வருபவா் செல்லப்பா என்கிற ராஜ்முகம்மது (42), இவா் வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடித்து கடையை பூட்டிச் சென்றாா்.

இந்நிலையில்  சனிக்கிழமை காலை கடையை திறப்பதற்கு வந்து பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கைப்பேசி மற்றும் உதிரி பாகங்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் பாபநாசம்  துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேல், காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு, மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று  பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். தொடா்ந்து  வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.

Dinamani
www.dinamani.com