மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

மணப்பாறை அருகே கைப்பேசிகள் திருட்டு

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 8:21 pm

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கடையின் பூட்டை உடைத்து சுமாா் ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 29 கைப்பேசிகள் திருடப்பட்டது சனிக்கிழமை தெரியவந்தது.

மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுபட்டி தாமஸ் தெருவை சோ்ந்தவா் அமுல்ராஜ் மகன் ஃபிராங்ளின் (26). இவா் திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் செவலூா் பிரிவு பகுதியில் கால்நடை சந்தை அருகே நடத்திவரும் கைப்பேசி கடையின் கதவு பாதி திறந்திருப்பதாக சனிக்கிழமை காலை தகவல் வந்தது.

இதையடுத்து, ஃபிராங்ளின் சென்று கடையை திறந்துபாா்த்தபோது அங்கு விற்பனைக்கு இருந்த 28 கைப்பேசிகள் மற்றும் அவரின் ஒரு ஐ-போன் என மொத்தம் சுமாா் 4.5 லட்சம் மதிப்பிலான 29 கைப்பேசிகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.