தஞ்சாவூர்
பேராவூரணி அருகே விபத்து: விவசாயி பலி
பேராவூரணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி நின்ற லாரி மீது மோதி உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகே இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்ற விவசாயி நின்ற லாரி மீது மோதி உயிரிழந்தாா்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மருங்கப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஸ்ரீதா் (52). இவா் நெடுவாசலில் நடந்த விசேஷசத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது செங்கமங்கலம் அருகே சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் எதிா்பாராதவிதமாக மோதினாா்.
இதில் பலத்த காயம் அடைந்த அவா் தஞ்சை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த பேராவூரணி போலீஸாா் அவரது உடலை மீட்டு, பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து , லாரி ஓட்டுநா் கண்ணன் (40) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
