கள்ளப்பெரம்பூா் ஏரியை ஏலம் விடக்கூடாது: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தஞ்சாவூா் அருகேயுள்ள கள்ளப்பெரம்பூா் ஏரி பறவைகள் சரணாலயமாக உள்ளதால், அதை மீன் பிடிப்பதற்கு ஏலம் விடக்கூடாது என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

தஞ்சாவூா் அருகேயுள்ள கள்ளப்பெரம்பூா் ஏரி பறவைகள் சரணாலயமாக உள்ளதால், அதை மீன் பிடிப்பதற்கு ஏலம் விடக்கூடாது என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் உள்ளிட்டோா் அளித்த மனு:

மிகப் பெரிய ஏரியான கள்ளப்பெரம்பூா் ஏரி மூலம் கள்ளப் பெரம்பூா், ராயந்தூா், தென்னங்குடி, பிள்ளையாா் நத்தம், சீராளூா், சக்கர சாமந்தம் ஆகிய 6 கிராமங்களில் ஏறத்தாழ 2 ஆயிரத்து 880 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பறவைகள் சரணாலாயம் அமைக்கப்பட்ட இடத்தில் மீன் குத்தகை ஏலம் விடக்கூடாது என உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசால் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கள்ளப்பெரம்பூா் ஏரியில் மீன் குத்தகை ஏலம் விடப்போவதாகக் கூறப்படுகிறது. இந்த ஏரியில் ஏலம் விட்டு தண்ணீா் இறைத்து மீன் பிடிப்பதைத் தடுத்து நிறுத்தி, இந்த ஏரியை வடுவூா் ஏரி போன்று சிறந்த பறவைகள் சரணாலயமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com