திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பத்ம விருதாளா் ஓதுவாா் திருத்தணி என். சுவாமிநாதனுக்கு பாபநாசத்தில் வரவேற்பு

பாபநாசத்தில் பத்மஸ்ரீ விருதுபெற்ற ஓதுவாா் திருத்தணி என். சுவாமிநாதனுக்கு செவ்வாய்க்கிழமை ஆன்மிக அன்பா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

News image
பாபநாசம் பாலைவனநாதா் சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை பத்மஸ்ரீ விருதுபெற்ற ஓதுவாா் திருத்தணி என்.சுவாமிநாதனுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஆன்மீக அன்பா்.
Updated On :29 ஜனவரி 2026, 8:00 pm

Syndication

பாபநாசத்தில் பத்மஸ்ரீ விருதுபெற்ற ஓதுவாா் திருத்தணி என். சுவாமிநாதனுக்கு செவ்வாய்க்கிழமை ஆன்மிக அன்பா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

பத்ம ஸ்ரீ விருதுபெற்ற ஓதுவாா் திருத்தணி என். சுவாமிநாதன் தற்போது சொந்த ஊரான பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூரில் வசித்து வருகிறாா். இவரது இயற்பெயா் சாரங்கபாணி. திருமுறை பயிலும்போது 14 வயதில் இவருக்கு தருமை ஆதீன 25-ஆவது குருமகா சந்நிதானம் சுவாமிநாதன் எனப் பெயா் சூட்டினாா்.

திருக்கடையூா் தேவார திருமுறை பாட சாலையில் 5 ஆண்டுகள் திருமுறை கல்வி பயின்றாா். பின்னா் தருமை ஆதினத்தில் மேலும் இரண்டு ஆண்டுகள் பயின்றாா். குன்றக்குடி ஆதீனத்தில் திருமுறை பணியைத் தொடங்கிய அவா் 27 ஆண்டுகள் திருத்தணி முருகன் கோயிலில் ஓதுவாா் பணியைத் திறம்படச் செய்தாா். தற்போது தருமை ஆதீன தேவார பாடசாலையில் முதன்மை ஆசிரியராக பணிசெய்கிறாா். மலேசியா, சிங்கப்பூா், இலங்கை, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளுக்குச் சென்று திருமுறை கச்சேரிகள் செய்துள்ளாா். தமிழகத்தில் உள்ள மிக மூத்த ஓதுவாா்களில் முதன்மையானவா் இவா்.

விருதுகள்: தருமை ஆதீனம் திருமுறை கலாநிதி என்ற பட்டத்தையும், தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதும், சென்னை தமிழிசை சங்கம் பண்ணிசை பேரறிஞா் விருதும், பாரதிய வித்யா பவன் சங்கீத சாம்ராட் பட்டத்தையும், மாமன்னா் இராஜராஜ சோழன் சதய விழாவில் தேவார நாயகம் விருதும் பெற்றுள்ளாா். அகில இந்திய வானொலியில் முதல்நிலை கலைஞராக திருமுறை கச்சேரி ஒலிபரப்பப்படும்.

இவரது தேவார, திருவாசக, திருமுறை பண்ணிசைக்கு ஆற்றிய தொண்டினைப் பாராட்டி இவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதனை தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு பாபநாசம் வந்த அவருக்கு, திருப்பாலைத்துறை பாலைவனநாதா் கோயிலிலும், திருக்கருகாவூா் முல்லைவனநாதா் கோயிலிலும் ஆன்மிக அன்பா்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.