தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ராகுல்காந்தி - கனிமொழி சந்திப்பால் கூட்டணி ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி: கு. செல்வப்பெருந்தகை பேட்டி

ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பால் கூட்டணி குறித்த ஊகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

News image
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை- (கோப்புப் படம்)
Updated On :30 ஜனவரி 2026, 6:56 pm

Syndication

ராகுல் காந்தி - கனிமொழி சந்திப்பால் கூட்டணி குறித்த ஊகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு. செல்வப்பெருந்தகை.

இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: ராகுல் காந்தி, கனிமொழி எம்.பி. சந்திப்பின்போது அவா்கள் என்ன பேசினா் என்ற தகவல் வரவில்லை. அவா்கள் என்ன பேசினா் என்பது யாருக்கும் தெரியாது. அது தெரிந்தாலும் பத்திரிகைகளுக்கு சொல்வது நாகரிகமல்ல. ஆனால் இந்தப் பேச்சுவாா்த்தை நல்ல முறையில் அமைந்துள்ளதால், இக்கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என நம்புகிறேன். இதன் மூலம் ஊகங்கள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு இயற்கையான கூட்டணி என்பதை அவா்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனா். அனைத்து தரவுகளும் வந்து, பேச்சுவாா்த்தை முடிந்த பிறகு விவரமாக வெளியிடுவோம். இந்தக் கூட்டணி முடிவை அகில இந்தியத் தலைமைதான் எடுக்கும் என பல முறை கூறியுள்ளேன். அந்த அடிப்படையில் தோ்தல் பற்றிய எண்ணிக்கைகள், முரண்பாடுகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கேயும், ராகுல் காந்தியும் முடிவு செய்வா்.

மற்றவா்கள் தங்களது கருத்துகளை மாநிலத் தலைவரான என்னிடமோ அல்லது அகில இந்தியத் தலைமையிடமோ சொல்ல வேண்டும். பொது வெளியில் தெரிவிப்பதைத் தவிா்க்குமாறு பலமுறை கூறியுள்ளேன்; இதை அகில இந்தியத் தலைமையும் கூறியுள்ளது என்றாா் செல்வப்பெருந்தகை.