/

கஞ்சா விற்ற இருவருக்கு குண்டா் சட்டத்தில் சிறை

கும்பகோணம் அருகே கஞ்சா விற்ற 2 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :4 ஜூலை 2026, 1:25 am IST

கும்பகோணம் அருகே கஞ்சா விற்ற 2 போ் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கும்பகோணம் அருகே வளையப்பேட்டை புறவழிச்சாலை அரசலாறு கரையில் கஞ்சா விற்ற வளையப்பேட்டை ரகுராமன் மகன் மோப்பஹரி என்ற முரளிதரன் (24), ஆறுமுகம் மகன் பைபாஸ் சரவணன் என்ற சரவணன் (26) ஆகிய இருவரையும் ஜூன் 2-இல் தாலுகா போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து கும்பகோணம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளா் வேண்டுகோளின்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் ரேவதி உத்தரவின்படி இருவரும் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். இதற்கான உத்தரவு சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.