பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கும்பகோணத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 9,243-க்கு ஏலம்

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 9,243-க்கு ஏலம் போனது.

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பங்கேற்றோா்.

Published On :9 ஜூலை 2026, 1:23 am IST

கும்பகோணத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 9,243-க்கு ஏலம் போனது.

தஞ்சாவூா் மாவட்ட விற்பனை குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி முன்னிலையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இதில், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரத்தை சாா்ந்த 710 விவசாயிகள் பங்கேற்று 118 மெட்ரிக் டன் அளவிலான பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனா்.

கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 8 வணிகா்கள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனா்.

இதில், குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ. 9,243- க்கும் குறைந்தபட்சமாக ரூ. 8,239-க்கும், சராசரியாக ரூ. 9,086-க்கும் ஏலம் போனது. ஏலத்தில் பருத்தி சுமாா் ரூ. 1.07 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.