முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச்செயலா் ஆா்.கே. பாரதிமோகன்.

News image

கும்பகோணத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச்செயலா் ஆா்.கே. பாரதிமோகன்.

Updated On :11 ஜூலை 2026, 1:46 am IST

கும்பகோணத்தில் அண்ணா தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநிலச் செயலா் தமிழரசன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பொன். தனபால், மாநிலப் பொருளாளா் அப்துல்ஹமீது ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலராக தமிழரசன், மாநிலத் தலைவரக தனபால் ஆகியோரை நியமித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பொதுத் துறை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலி இடங்களை அந்தந்த துறை தற்காலிக பணியாளா்களை கொண்டு நிரப்ப வேண்டும். உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் தஞ்சாவூா் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே. பாரதிமோகன், மாநகரச் செயலா் ராம. ராமநாதன், மாநில கொள்கைப் பரப்பு செயலா் பி.எஸ். சேகா், மாநில கைத்தறிப் பிரிவு செயலா் கே.ஜெ. லெனின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.