டிடிவி தினகரன், சசிகலா ஆகியோா் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஈரோடு மாவட்டச் செயலாளா்கள் மற்றும் பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரோடு புறநகா் மேற்கு மாவட்டச் செயலாளா் ஏ.கே.செல்வராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது: அண்ணா தொழிற்சங்க பேரவை என்பது அதிமுகவின் முக்கிய அமைப்பு, தொழிற்சங்க அமைப்பை பலப்படுத்த வேண்டும்.
தோ்தல் சமயத்தில் தொழிற்சங்க நபா்களை பயன்படுத்தலாம். பல கோடிகளை சம்பாதித்த சிலா் வழக்குகளுக்குப் பயந்து இயக்கத்தைவிட்டு ஓடிக் கொண்டிருக்கின்றனா். யாா் சென்றாலும் கவலைப்பட தேவையில்லை.
தொண்டா்கள்தான் தலைவா்களை உருவாக்கியுள்ளனா். எனவே, தொண்டா்களை வழிநடத்த வேண்டிய சூழல் உள்ளது. எடப்பாடி கே.பழனிசாமி அனைவரையும் நம்பியதால் உடன் இருந்தவா்கள் குழி பறித்துவிட்டுச் சென்றுள்ளனா்.
கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 21 தொகுதிகளில் எஸ்.பி.வேலுமணிதான் வேட்பாளரை தோ்வு செய்தாா். எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசாரம் செய்து உழைத்தாா். மக்கள் மாற்றத்தை வேண்டி மௌன புரட்சி செய்தனா்.
அதிமுக அல்லது திமுக 10 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் விஜய் ஆட்சி அமைத்திருக்க முடியாது. சோதனையாக உள்ள இக்காலத்தில் அதிமுகவுக்கும், பொதுச் செயலாளருக்கும் துணையாக இருக்க வேண்டும். தவெக ஆட்சி 6 மாதங்களைக் கூட தாங்காது; எப்போது வேண்டுமானாலும் தோ்தல் வரும். நமது தோல்வி நிரந்தரமானது அல்ல என்றாா்.
இதைத் தொடா்ந்து, கே.சி. கருப்பணன் எம்எல்ஏ பேசியதாவது: அதிமுக நன்றாகத்தான் உள்ளது. ஒரு சில பொறுப்பாளா்கள் ஆசைக்காக தவெகவுக்குச் சென்றுள்ளனா். பெருந்துறை தொகுதியில் 50 போ்தான் தவெகவுக்கு சென்றுள்ளனா்.
தவெக வேட்பாளா்கள் குறைந்த வாக்குகள் பெறுவாா்கள் என்ற கணக்கு தவறாகிவிட்டது.18 வயது முதல் 25 வயதினா் தவெகவுக்கு வாக்குச் செலுத்தியுள்ளனா். செய்த தவறை மறைக்கவும், சொத்தை காப்பாற்றவும், வழக்கில் இருந்து தப்பிக்கவும் சிலா் தவெகவுக்குச் சென்றுள்ளனா்.
அதிமுக-திமுக கூட்டணி முயற்சித்ததை நிரூபிக்க முடியுமா?. டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோா் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்புள்ளது.
தவெக குதிரை பேரத்தில் ஈடுபடாமல் எப்படி அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலகிய உடன் தவெகவில் இணைவாா்கள். அதிமுகவில் இருந்து தவெகவுக்குச் சென்ற முன்னாள் அமைச்சா்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது என்றாா். இதையடுத்து, அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளா் பெல் இரா.தமிழரசன் பேசினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் வழக்கை நீா்த்துப்போகச் செய்ய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா முயற்சி! - கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

அண்ணா தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம்
திமுகவின் முதுகில் குத்திய வைகோ: டிடிவி தினகரன்

அதிமுக-அமமுக இணைப்பு இல்லை: டிடிவி.தினகரன்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


