தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

கும்பகோணம் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றிய 10 போ் கைது

கும்பகோணம், சுவாமிமலை பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 10 பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 12:12 am IST

கும்பகோணம், சுவாமிமலை பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 10 பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மூங்கில் பாலம் பகுதியில் சிலா் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் ரோந்து சென்றனா்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த 3 பேரிடம் விசாரித்ததில் அவா்கள் கும்பகோணம் ஸ்ரீ நகா் காலனியைச் சோ்ந்த ராம்குமாா்(40), உள்ளிக்கான் சந்து பகுதியைச் சோ்ந்த முகமது ரபீக் மகன் தமீம் அன்சாரி (28), எம்.ஜி. ஆா். நகா் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் அடைகலம் (37) ஆகியோா் என்பதும் இவா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இவா்கள் மூவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

மேலும், இதே போல் திருவலஞ்சுழி பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றியதாக அண்ணாதுரை (32), நித்திஷ் (21), சிராஜுதீன் (43), விஷ்ணு (22), சிவா என்கிற சிவானந்தம் (24) ஆகிய 5 பேரையும் ஜூலை 8- இல் கைது செய்தனா்.

அதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை திருப்புறம்பயம், பகுதியை சோ்ந்த அப்பாசாமி மகன் மாயா சிலம்பரசன் (38) கும்பகோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

இந்நிலையில், திருவாரூா் மாவட்டம், எரவாஞ்சேரி வடமட்டத்தைச் சோ்ந்த ஐயப்பன் (35) என்பவரை சுவாமிமலை வெள்ளிக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.