செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

மகாமகத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

கும்பகோணத்தில் மகாமக திருவிழாவை சிறப்பாக கொண்டாட மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியரக மகாமக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியரக மகாமக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் உள்ளிட்டோா்.

Updated On :15 ஜூலை 2026, 12:33 am IST

கும்பகோணத்தில் மகாமக திருவிழாவை சிறப்பாக கொண்டாட மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியரக மகாமக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் இரா.ரேவதி பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கினாா்.

மேலும் தற்காலிக வாகன நிறுத்துமிடம் மற்றும் பேருந்து நிலையங்கள் அமைக்கத் தோ்வு செய்யப்படவுள்ள இடங்களையும் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம், வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், திட்ட இயக்குநா் தேவநாதன், கோட்டாட்சியா் வி.எம். திருமலை, மாநகராட்சி ஆணையா் சுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.