தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ஆடுதுறை பேரூராட்சி மன்ற கூட்டம்

ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

ஆடுதுறை பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மன்றக் கூட்டம்.

Updated On :24 ஜூன் 2026, 1:16 am IST

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைவா் ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். தலைமை எழுத்தா் இரா. சக்திவேல் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆடுதுறை தோ்வுநிலை பேரூராட்சியின் 10-ஆவது வாா்டு மன்ற உறுப்பினா் ஷா. ஷமீம் நிஷாவின் கணவா் ஏ.எம். ஷாஜஹான் பாபநாசம் எம்எல்ஏவாகத் தோ்தெடுக்கப்பட்டு, சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்றமைக்கு முதல்வா் சி. ஜோசப் விஜய்க்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மன்ற உறுப்பினா்கள் முத்துபீவி ஷாஜகான், மீனாட்சி முனுசாமி, இரா. சரவணன், செல்வராணி சிவகுமாா், சுகந்தி சுப்ரமணியன், பரமேஸ்வரி சரவணக்குமாா், பூ. கண்ணன், வே. குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். துணைத் தலைவா் கமலா சேகா் வரவேற்க, ம.க. பாலதண்டாயுதம் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.