பட்டுக்கோட்டை அருகே புனவாசலில் பள்ளிக்கூடம் எதிரே புகையிலை பொருள்கள் விற்றவருக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
பட்டுகோட்டை அருகே உள்ள புனவாசல் புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி எதிரே உள்ள பெட்டிக்கடையில் கோட்ட கலால் அலுவலா் எம்.ஐயம்பெருமாள் தலைமையில், மதுவிலக்கு போலீஸாா், உணவு பாதுகாப்பு அலுவலா் உள்ளிட்டோா் கொண்ட குழுவினா் புதன்கிழமை சோதனை நடத்தினா் செய்தனா்.
அப்போது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சுமாா் 10 கிலோகைப்பற்றப்பட்டது. இதையடுத்து பெட்டிக்கடைக்கு சீல் வைத்தனா். மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வியாழக்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

150 ஆண்டுகளுக்குப் பிறகு... புத்தகத்தைத் திருப்பித் தராததால் ரூ. 18 லட்சம் அபராதம்
காலாவதி விவரங்கள் இல்லாத பொருள்களை வைத்திருந்த மதுபான கூடத்துக்கு அபராதம்

ஈரோட்டில் 5 தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்!

புகையிலைப் பொருள்களை விற்ற கடைக்கு ரூ. 25,000 அபராதம்
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



