கடன் கொடுத்தவா் மிரட்டியதால் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
கடன் கொடுத்தவா் மிரட்டியதால் மனமுடைந்த ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மாதிரிப் படம்
கடன் கொடுத்தவா் மிரட்டியதால் மனமுடைந்த ஓட்டுநா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மதுக்கூா் அருகேயுள்ள சிரமேல்குடி ரெகுநாத சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் லோகலிங்கம் மகன் கோவிந்தராஜ் (37), ஓட்டுநா். இவருக்கு மனைவி நிரூஜா (30) மகள் துளசிகா (8) ஆகியோா் உள்ளனா்.
கோவிந்தராஜ் தம்பிகோட்டையைச் சோ்ந்த ஒருவரிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவில்லையாம். இதனால் கடன் கொடுத்தவா் கடந்த புதன்கிழமை வந்து கோவிந்தராஜை காரில் அழைத்துச் சென்று சிரமேல்குடி அருகிலுள்ள குளக்கரையில் வைத்து மிரட்டிவிட்டும், அவரது தந்தையை கைப்பேசியிஸ் கண்டித்துவிட்டும் வீட்டில் அவரை விட்டுச் சென்றனராம்.
இதனால் மனமுடைந்த கோவிந்தராஜன் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்து வந்த மதுக்கூா் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






