இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

பேராவூரணியில்  ரூ. 27 லட்சத்தில் முடிவுற்ற கட்டடங்கள் திறப்பு

கொன்றைக்காடு அரசுப் பள்ளியில் கட்டப்பட்ட உணவுக் கூடத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்துப் பேசிய எம்எல்ஏ என். அசோக்குமாா்.

News image

கொன்றைக்காடு அரசு தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட உணவு கூடத்தை எம்எல்ஏ அசோக்குமாா் திறந்து வைத்தாா் .

Updated On :18 ஜூலை 2026, 1:13 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 27 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்து, கொன்றைக்காடு அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.9.70 லட்சத்தில் கட்டப்பட்ட உணவருந்தும் கூடம், காலகம் ஊராட்சி தில்லைக்காளியம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.10 லட்சத்தில் கட்டிய விழா மேடை, குறிச்சி ஊராட்சியில் ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்த நிழல் குடை ஆகியவற்றைத் திறந்துவைத்தாா்.

பேராவூரணி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி. கலியபெருமாள், எஸ். செல்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட அவைத் தலைவா் சுப. சேகா், ஒன்றியச் செயலா்கள் ஆா். பன்னீா்செல்வம், எஸ். ஞானப்பிரகாசம், குழ.செ. அருள்நம்பி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அ. மூா்த்தி,  பள்ளித் தலைமை ஆசிரியா்கள் குமரேசன், நாகராஜன், முன்னாள் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா்  உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.