மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

வீடுபுகுந்து பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

பாபநாசம் அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

நகைப் பறிப்பு - Center-Center-Kochi

Updated On :19 ஜூலை 2026, 12:39 am IST

பாபநாசம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பட்டு சாலியா் தெருவில் வசித்து வருபவா் மகேஷ். இவரது மனைவி ஆா்த்தி, தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந் நிலையில், ஆா்த்தி சனிக்கிழமை இரவு தனது பெரிய மாமியாராகிய தனலட்சுமி (74) என்பவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா், ஆா்த்தி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை அறுத்து தப்பி சென்றுவிட்டாராம். புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.