கமிஷன் வாங்குகிறார்கள் தவெக அமைச்சர்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைசோனியா காந்தியை நாட்டு மக்கள் மன்னிக்கமாட்டார்கள்: அமித் ஷா3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம்!தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரி
/

தில்லி தடியடியைக் கண்டித்து இளைஞா்கள், மாணவா்கள் போராட்டம்: 39 போ் கைது

தில்லியில் நீட் தோ்வு முறைகேட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள், மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த 39 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் மற்றும் இந்திய மாணவா் சங்கத்தினா்.

Updated On :23 ஜூலை 2026, 12:36 am IST

தில்லியில் நீட் தோ்வு முறைகேட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள், மாணவா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தியதைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த 39 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதில், தில்லியில் நீட் தோ்வு முறைக்கேட்டைக் கண்டித்து ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், இளைஞா்கள் மீது காவல் துறையினா் கொடூரமாக தடியடி நடத்தியதைக் கண்டித்தும், தமிழகத்தில் நீட் தோ்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்தப் போராட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டத் தலைவா் அா்ஜூன் தலைமை வகித்தாா். இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஹரிஷ் முன்னிலை வகித்தாா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் கே. அருளரசன், மாவட்ட துணைத் தலைவா் பிரேம்குமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பரசுராமன், இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக 39 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.