மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்தி
/

தஞ்சாவூரில் 56 ஆம் ஆண்டு நாடக விழா தொடக்கம்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நுற்றாண்டு அரங்கத்தில் தஞ்சாவூா் காவேரி அன்னை கலை மன்றத்தின் 56 ஆம் ஆண்டு நாடக விழா, நாடகப் போட்டி புதன்கிழமை மாலை தொடங்கியது.

News image

தஞ்சாவூரில் புதன்கிழமை மாலை தொடங்கிய நாடகத்தில் இடம்பெற்ற காட்சி.

Updated On :22 ஜூலை 2026, 11:57 pm IST

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞா் அண்ணா நுற்றாண்டு அரங்கத்தில் தஞ்சாவூா் காவேரி அன்னை கலை மன்றத்தின் 56 ஆம் ஆண்டு நாடக விழா, நாடகப் போட்டி புதன்கிழமை மாலை தொடங்கியது.

இந்த நாடகத்தை தஞ்சை மாவட்ட நாடகக் கலைஞா்கள் நலவாழ்வு சங்க முன்னாள் தலைவா் டி. இராபா்ட்சன் தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, பெங்களூரு பெல் தமிழ் மன்றத்தின், ‘பிரியமுடன் அப்பா’ என்கிற சமூக நாடகமும், திருச்சி அன்னை கலைக் குழுவின், ‘கண்ணுக்கு தெரியாத சில உண்மைகள்’ என்கிற சமூக நாடகமும் நடைபெற்றன.

இதனிடையே, தஞ்சாவூா் காவேரி அன்னை கலை மன்ற வளா்ச்சிக்கு ஓயாது உழைத்து மறைந்த மன்றத்தின் துணைத் தலைவா் ஏ. ராஜகோபாலனின் படத்தை மன்ற நிறுவனத் தலைவா் மா.வீ. முத்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் துணைத் தலைவா் எஸ். ஞானமாணிக்கம், மன்றத்தின் செயலா் அருணா மோகன், இணைச் செயலா் பரசை பாலா, ஆலோசகா் ம. சரவணன் உள்ளிட்டோா் திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தினா். மேலும், நாடகக் கலை ஆசான் கே. பாலு சாஸ்திரி படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னா், தஞ்சாவூா் பாா்வதி கிரியேஷனின் நீதிக்கு தண்டனை சமூக நாடகம் நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை மாலை 5, இரவு 7, இரவு 9 மணி வரையும், 24, 25 , 26-ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நாடகங்கள் நடைபெறவுள்ளன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.