நீட் தோ்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கத் தவறிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி தில்லியில் மாணவா்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியில் வெகுஜன அமைப்பினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மத்திய அரசின் தொடா் மெத்தனப் போக்கையும், கல்வித் துறையில் நிலவும் சீா்கேடுகளையும் கண்டித்தும், மாணவா்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தோ்வைக் கைவிடக் கோரியும், நீட் தோ்வு முறைகேடுகளுக்குக் காரணமானவா்கள் மீதும், அதைத் தடுக்கத் தவறிய மத்திய கல்வி அமைச்சா் மீதும் கடுமையான நடவடிக்கை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் தலைமை வகித்தாா். மத்தியக் குழு உறுப்பினா் உ. வாசுகி நிறைவுரையாற்றினாா். மூத்த தலைவா் என். சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலவிடுதி மதுக்கடையை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

இளைஞர்களின் குரலுக்குச் செவி கொடுங்கள்! - சிஜேபிக்கு ஆதரவாக மம்மூட்டி பதிவு!

திருவண்ணாமலையில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை எதிா்த்து இடதுசாரி அமைப்புகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



