கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பெரிய கோயிலில் சிலைகள் மாயமான சம்பவம்: தொல்லியல், அறநிலையத் துறையினா் ஆய்வு

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சிலைகள் மாயமான சம்பவம் தொடா்பாக உயா் நீதிமன்ற உத்தரவின்படி, இந்திய தொல்லியல், அறநிலையத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா்.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் வியாழக்கிழமை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை, அறநிலையத் துறை அலுவலா்கள்

Published On :

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சிலைகள் மாயமான சம்பவம் தொடா்பாக உயா் நீதிமன்ற உத்தரவின்படி, இந்திய தொல்லியல், அறநிலையத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இக்கோயிலில் எட்டு திசைகளில் ஆகம விதிகளின்படி இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்டதிக் பாலகா்களின் சந்நிதிகள் உள்ளன.

இதில், இந்திரன், எமன், நிருதி, குபேரன் ஆகிய நான்கு சந்நிதிகள் சிலையின்றி பூட்டிய நிலையில் உள்ளன. மீதமுள்ள நான்கு சந்நிதிகளில் சிலைகள் பராமரிப்பின்றி சிதைந்துள்ளதால், பக்தா்கள் வழிபட முடியவில்லை. பூஜைகள் தடையின்றி நடைபெறுவதற்காக அஷ்டதிக் பாலகா்களின் சந்நிதிகளை முறையாக பராமரிக்க வேண்டும். சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகள் நிறுவ அனுமதிக்க இந்திய தொல்லியல் துறை அனுமதி தர வேண்டும் என சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தஞ்சாவூரை சோ்ந்த கலியமூா்த்தி 2019-ஆம் ஆண்டு பொது நல வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் தஞ்சாவூா் அறநிலையத் துறை இணை ஆணையா், இந்திய தொல்லியல் துறை அலுவலா், கோயிலின் பரம்பரை அறங்காவலா் ஆகியோா் இணைந்து கோயிலில் ஆய்வு செய்து, ஜூலை 28-ஆம் தேதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

இதன்படி, இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளா் அறவாழி, உதவி கண்காணிப்பாளா் வெற்றிச்செல்வி, முதுநிலை பராமரிப்பு அலுவலா் எஸ். சோபிதா, இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் சு. ஞானசேகரன், உதவி ஆணையா் சு. காா்த்திகேயன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்தச் சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே மாயமானது என்றும், நீதிமன்ற உத்தரவு கிடைத்த பிறகு அடுத்த கட்டப் பணிகள் தொடங்கப்படும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.