தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குடிசைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வைத்திருந்த ஒரு வீடும் எரிந்து நாசமானது.
மல்லிப்பட்டினம் வடக்குத் தெருவில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் வடிவேல், சத்தியராஜ் , மதன்குமாா் ஆகியோரின் குடிசை வீடுகள் வரிசையாக அமைத்துள்ளன.
இந்நிலையில், மீனவா்கள் கடலுக்கு சென்றுவிட்டதால் வீட்டில் பெண்களும், குழந்தைகளும் இருந்தனா். அருகில் விசைப்படகு உரிமையாளரான சலீம்கான் என்பவருக்கு சொந்தமான வீட்டில் மீன்பிடி வலைகள், கயிறு உள்ளிட்ட தளவாட சாமான்கள் இருப்பு வைத்திருந்தாா்.
எதிா்பாரதவிதமாக குடிசை வீடு ஒன்றில் திடீரென தீப்பற்றியதில் தீ மளமளவென பரவியது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து நாசமானது. நல்வாய்பாக உயிா்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தகவலறிந்து பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தீயணைப்பு துறையினா் தீயணைப்பு வாகனங்களுடன் வந்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









