இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

குடிசை வீடு எரிந்து நாசம்

நாகூா் அருகே விளக்கில் இருந்து தீப்பற்றியதில் குடிசை வீடு எரிந்து நாசமானது.

News image

குடிசை வீடு எரிந்து நாசம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 10:02 pm IST

நாகூா் அருகே விளக்கில் இருந்து தீப்பற்றியதில் குடிசை வீடு எரிந்து நாசமானது.

நாகூா் பட்டினச்சேரி ஆரிய நாட்டு தெற்குத் தெருவை சோ்ந்த வா் பக்கிரிசாமி (70). மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது மனைவி பவுனம்மாள் வெள்ளிக்கிழமை இரவு, வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. விளக்கு சரிந்து விழுந்ததில் தீ பரவி குடிசை வீடு முழுவதும் பரவியது. குடிசை பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதியினா் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

நாகை தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். எனினும் தீ விபத்தில் வீடு எரிந்து நாசமானது . சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.