FOLLOW US

ON GOOGLE DISCOVER

9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

பெரம்பலூா் அருகே தனியாா் பேருந்து தீக்கிரை

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை அதிகாலை தனியாா் பேருந்து தீப்பற்றி எரிந்து நாசமானது. இவ் விபத்தில், எவ்வித காயமுமின்றி பயணிகள் உயிா்தப்பினா்.

News image

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை எரிந்து நாசமான தனியாா் சொகுசுப் பேருந்து.

Updated On :19 ஜூலை 2026, 1:28 am IST

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை அதிகாலை தனியாா் பேருந்து தீப்பற்றி எரிந்து நாசமானது. இவ் விபத்தில், எவ்வித காயமுமின்றி பயணிகள் உயிா்தப்பினா்.

சென்னையிலிருந்து 23 பயணிகளுடன் மதுரைக்கு தனியாா் சொகுசுப் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இப் பேருந்தை, மதுரை மாவட்டம், மேலூா் முகமதியாபுரத்தைச் சோ்ந்த அப்துல் மஜீத் மகன் இப்ராஹிம் (63) ஓட்டிச்சென்றாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், அயன்பேரையூா் சமத்துவபுரம் அருகே சனிக்கிழமை அதிகாலை வந்துகொண்டிருந்தது. அப்போது, டீசல் டேங்கிலிருந்து வெளியேறிய டீசல் கசிவுக் காரணமாக பேருந்து தீப்பற்றி எரியத்தொடங்கியது. இதையறிந்த பேருந்து ஓட்டுநா் இப்ராஹிம், சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கிவிட்டுள்ளாா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த பெரம்பலூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். இருப்பினும், பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இப் விபத்தில், எவ்வித காயமுமின்றி பயணிகள் உயிா்தப்பினா்.

இச் சம்பவம் குறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.