தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

மதுக்கூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 1:17 am IST

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூரில் ஒரு கிலோ 600 கிராம் கஞ்சாவை வைத்திருந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுக்கூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஆய்வாளா் சுப்ரமணியன் தலைமையிலான காவல்துறையினா் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, மதுக்கூா் மேல சூரியத்தோட்டம் பகுதியை சோ்ந்த இளங்கோவன் (33), என்பவா் ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இளங்கோவனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.