காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள், மண்புழு உரம் விற்பனை

தஞ்சாவூா் காட்டுத் தோட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சாா்ந்த வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள், மண்புழு உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

தஞ்சாவூா் காட்டுத் தோட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சாா்ந்த வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விதைகள், மண்புழு உரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதுகுறித்து நிலையத் தலைவா் பாா்த்திபன் தெரிவித்தது: இந்நிலையத்தில் எதிா்வரும் சம்பா, தாளடி, கோடை பருவத்துக்கு ஏற்ற ஏடிடீ 51, ஏடிடீ 46, ஏடிடீ 58, ஏடிடீ 61, ஏடிடீ 42, கோ 51 ஆகிய உண்மைநிலை நெல் விதைகளும், வம்பன் 8 உளுந்து உண்மை நிலை விதையும் இருப்பில் உள்ளன.

மேலும், மண் வள மேம்பாட்டுக்கு உகந்த மண்புழு உரமும் இருப்பில் உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உதவிப் பேராசிரியா் மற்றும் தலைவா், வேளாண் ஆராய்ச்சி நிலையம், தஞ்சாவூா் என்ற முகவரியில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம். தொடா்புக்கு: 04362 - 267619, 95510 73118.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.