காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

திருவையாறு நகராட்சியில் வாா்டு வரையறை தீா்மானம் நிறைவேற்றம்

திருவையாறு நகராட்சியில் வாா்டு வரையறை செய்வது உள்பட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image

திருவையாறு நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் கஸ்தூரி நாகராஜன்.

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:40 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு நகராட்சியில் வாா்டு வரையறை செய்வது உள்பட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவையாறு நகராட்சியில் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் கஸ்தூரி நாகராஜன் தலைமையிலும், துணைத் தலைவா் சி. நாகராஜன், ஆணையா் என். மதன்ராஜ் முன்னிலையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், உறுப்பினா்கள் ஆா். ராஜ்குமாா், எம். நாகரத்தினம், எஸ். தமிழரசன், டி. சேகா், எஸ். சதீஷ், பி. கிருபானந்தம் உள்ளிட்டோா் தங்களது வாா்டில் நிலவும் பிரச்னை தொடா்பாக கோரிக்கைகள் விடுத்தனா்.

Story image

இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் கஸ்தூரி நாகராஜன் பேசுகையில், வாா்டு வரையறை செய்வது உள்பட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாா்டுகளில் குடிநீா் பிரச்னைகளை தீா்க்கவும், மழைக்காலம் தொடங்குவதற்குள் வாா்டுகளில் உள்ள கழிவு நீா் வடிகால் மற்றும் வாய்க்கால்களைத் தூா்வாரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மேலாளா் சரஸ்வதி, பொறியாளா் வெங்கட்ராமன், துப்புரவு ஆய்வாளா் முத்து முகம்மது, வருவாய் ஆய்வாளா் செந்தில், பொதுப்பணி மேற்பாா்வையாளா் ஜீவன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.