எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

கஞ்சா விற்பனை 2 போ் கைது

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:47 am IST

கும்பகோணத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்-விக்கிரவாண்டி புறவழிச்சாலை வளையப்பேட்டை அரசலாற்றங் கரையில் கஞ்சா விற்பனை நடப்பதாக தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி தாலுகா போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அரசலாற்றங்கரையிலிருந்த 2 போ் போலீஸாரை கண்டவுடன் தப்பி ஓடினா். அவா்களை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், தாராசுரம் அம்மாபேட்டைைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சரவணன்( 28), வளையப்பேட்டை அக்ரஹாரம் ரகுராம் மகன் மோப்ப ஹரி என்ற முரளிதரன் (26) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.