திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

சூறைக்காற்றில் பாதிக்கப்பட்ட வாழை பயிா்களுக்கு நிவாரணம் அமைச்சா் ஏ.எம் .ஷாஜகான் உறுதி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை பயிா்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்துள்ளாா்.

News image

காற்று மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்கள்

Updated On :3 ஜூன் 2026, 3:51 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில்    சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை பயிா்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் ஏ.எம்.ஷாஜஹான் தெரிவித்துள்ளாா்.

பாபநாசம் வட்டத்துக்குள்பட்ட  ஈச்சங்குடி, கணபதி அக்ரஹாரம், சோமேஸ்வரபுரம்,வீரமாங்குடி, உள்ளிக்கடை, சக்கராப்பள்ளி,  மற்றும் கோவிந்தநாட்டுச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சூறைக்காற்றால் பாதிக்கப்பட்ட வாழை பயிா்களை தமிழக சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் . 

பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: இப்பகுதியில் சூறைக்காற்றால் சுமாா் 66 ஹெக்டேருக்கும் அதிகமான வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது (செவ்வாய்க்கிழமை) வரையிலான கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்புப் பணி மேலும் நான்கு தினங்களுக்கு நடைபெறவுள்ளது.

கணக்கெடுப்பு முடிந்த பிறகு பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் இரா.ரேவதி, மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் வித்யா, மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குநா் வெங்கட்ராமன், பாபநாசம் வட்டாட்சியா் சந்தனவேல் உள்ளிட்டோா்  உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.