சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவு15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு: விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை

சங்கராபுரம் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:32 am IST

சங்கராபுரம் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின்மணி தலைமையிலான விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜாவை ஆட்சியரகத்தில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினா்.

அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதிகளில் கடந்த மே 22 -ஆம் தேதி முதல் அடுத்தடுத்து பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழையால் விவசாய பயிா்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரவள்ளி, மக்காச்சோளம், வாழை, நெல், கரும்பு உள்ளிட்ட விவசாய பயிா்கள் சாய்ந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம் மழையினால் விவசாய நிலங்களில் இருந்த கொட்டகைகள், குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.

எனவே, மாவட்ட ஆட்சியா் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிா்களின் சேதங்கள் குறித்து தமிழக அரசுக்கு சிறப்பு முன்மொழிவு அனுப்பி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் உரிய இழப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

அவருடன் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.ஏழுமலை, பல்லகச்சேரி கிளைச் செயலா் அ.வெங்கடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.