தஞ்சாவூா் மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி மாலை அணிவித்து வரவேற்றாா்.
தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இந்நிலையில், தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி சௌராஷ்ட்ரா தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி மாலை அணிவித்து வரவேற்றாா்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள், சீருடைகளை வழங்கி, படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அன்றைய பாடங்களை அன்றைக்கே படிக்க பழகிக் கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியா் அறிவுரை வழங்கினாா். தொடா்ந்து, மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய்சரவணன், தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநில நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற தேனி வீரருக்கு ஆட்சியா் பாராட்டு

20 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை அவயங்கள்! மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் வழங்கினாா்

ஜூன் 4 இல் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியராக இரா. ரேவதி பொறுப்பேற்பு
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



