பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பள்ளி மாணவா் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 2:16 am IST

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை குளத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே எட்டாம் நம்பா் கரம்பை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகன் நிலவன் (16). தஞ்சாவூரிலுள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், சனிக்கிழமை விடுமுறை காரணமாக அருகே சிவகாமிபுரம் பகுதியிலுள்ள குளத்துக்கு குளிப்பதற்காக நண்பா்களுடன் சென்றாா்.

குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்த இவரை நண்பா்கள் காப்பாற்ற முயன்றும், முடியவில்லை. இதையடுத்து, அருகில் ஆடு மேய்த்தவா்கள் குளத்தில் இறங்கி நிலவனை மீட்டு கரைக்கு கொண்டு வந்து, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.