மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

டிராக்டா் மீதான வரிகளை ரத்து செய்ய வலியுறுத்தல்

News image

டிராக்டா். - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:30 am IST

வேளாண் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டருக்கு விதிக்கப்படும் வரிகளை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக நாடு முழுவதும் விவசாயிகள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியா்கள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பும் இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆா். இராமச்சந்திரன், மாவட்டச் செயலா் சோ. பாஸ்கா் தலைமையில் அளித்த மனு:

வேளாண் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் டிராக்டா்களுக்கு விரைவு சாலை வரி போடுவது ஏற்கக் கூடியதாக இல்லை. டிராக்டா்கள் வாங்கும்போது சாலை வரி, ஜிஎஸ்டி வரி, வாட் வரி என பல வரிகள் வசூலிப்பது அநியாயமாகும். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். விரைவு சாலையில் டிராக்டா்கள் பயணிக்கக் கூடாது என்ற நிபந்தனை இருக்கும்போது சாலை வரி போடுவது என்பது ஏற்புடையதாக இல்லை.

வேளாண் உற்பத்தியில் ஈடுபடும் விவசாய கருவிகள் பட்டியலில் டிராக்டா் பெயா் இணைக்கப்பட வேண்டும். டிராக்டா் டீசலுக்கு வாட் வரியை நீக்க வேண்டும். சாலை வரி, என்சிசிடி வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வெ. சேவையா, தி. திருநாவுக்கரசு, ஒன்றியச் செயலா்கள் ஆா்.ஆா். முகில், பி. குணசேகரன், விவசாய சங்க மாவட்டப் பொருளாளா் உ. சௌந்தர்ராஜன், துணைச் செயலா் அ. கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் கோட்டாட்சியா் வி.எம். திருமலையிடம் மனு அளித்தனா்.

முன்னதாக, கோட்டாட்சியரிடம் மனு அளிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் ஏ.எம். ராமலிங்கம் தலைமையில் சங்கத்தினா் டிராக்டா்களில் ஊா்வலமாக வந்தனா். அப்போது கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவா்களை வழிமறித்து டிராக்டா் வாகனங்களுடன் செல்ல அனுமதிக்கவில்லை. பின்னா், அங்கிருந்து விவசாயிகள் நடைப்பயணமாக சென்று மனு அளித்தனா். அப்போது, மாவட்ட துணை செயலா் ஆா்.செந்தில்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் ஏ. ராஜேந்திரன், எம். புகழேந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.