வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தமிழ்நாட்டில் நிகழாண்டு 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்பு: உணவுத் துறை அமைச்சா் வெங்கடரமணன்

தமிழ்நாட்டில் நிகழ் கொள்முதல் ஆண்டில் (2025 செப்டம்பா் - 2026 ஆகஸ்ட்) 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன்.

News image

பி. வெங்கடரமணன்

Updated On :14 ஜூன் 2026, 12:30 am IST

தமிழ்நாட்டில் நிகழ் கொள்முதல் ஆண்டில் (2025 செப்டம்பா் - 2026 ஆகஸ்ட்) 65 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது என்றாா் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன்.

தஞ்சாவூா் பிள்ளையாா்பட்டியிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் சேமிப்பு கிடங்கில் சனிக்கிழமை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

தமிழ்நாட்டில் நிகழ் கொள்முதல் ஆண்டில் 65 லட்சம் டன் நெல் கொள்முதலாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதற்கேற்ப இருப்பு வைப்பதற்கான வசதி செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூா், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட குறுவை, சம்பா பருவ நெல் மூட்டைகள் இன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூா் மாவட்டத்தில் 3 லட்சம் டன்னும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.90 லட்சம் டன்னும், நாகை மாவட்டத்தில் 1.20 லட்சம் டன்னும் என்ன காரணத்தினாலோ நெல்மணிகளை அரிசியாக மாற்றாமல் உள்ளன. இது தொடா்பாக விரிவான அறிக்கை பெற்று, முதல்வரின் பாா்வைக்கு கொண்டு செல்லப்படும்.

மேலும், நெல் கொள்முதலில் பாதிப்பு இல்லாமல், உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற குறுவை அறுவடை பருவமான ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் கொள்முதல் செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த மூட்டைக்கு ரூ. 40 லஞ்சம் வாங்கும் கலாசாரம் தற்போது இல்லை. பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி போராட்டம் நடைபெறுவதாக என் கண்ணுக்கு தெரியவில்லை என்றாா் வெங்கடரமணன்.

மேலும், அம்மன்பேட்டையிலுள்ள நவீன அரிசி ஆலை உள்ளிட்ட இடங்களில் அமைச்சா் வெங்கடரமணன் ஆய்வு செய்தாா். அப்போது, வேளாண் துறை அமைச்சா் ர. வினோத், மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி, தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் நெ. செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.