இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

முன்னாள் அமைச்சா் உபயதுல்லா பிறந்த நாள் விழா

தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா 85-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புகழ்மலா் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

News image

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா பிறந்த நாள் விழாவில் புகழ் மலரை திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி வெளியிட, அதைப் பெற்றுக் கொண்ட திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் அருள்தந்தை அமுதன் அடிகளாா், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ம. இராசேந்திரன். உடன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :17 ஜூன் 2026, 3:17 am IST

தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா 85-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புகழ்மலா் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் கு.வெ. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். புகழ்மலரை திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி வெளியிட, அதை திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் அருள்தந்தை அமுதன் அடிகளாா், சென்னை தமிழ் வளா்ச்சிக் கழகத் தலைவரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ம. இராசேந்திரன் பெற்றுக் கொண்டனா்.

திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.கே.ஜி. நீலமேகம், கவிதைப்பித்தன், துணை மேயா்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூா்), சு.ப. தமிழழகன் (கும்பகோணம்), முன்னாள் மேயா் சண். இராமநாதன், முன்னாள் நகா் மன்றத் தலைவா் சி. இறைவன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் து. செல்வம், திராவிடா் கழக மாநில ஒருங்கிணைப்பாளா் இரா. ஜெயகுமாா், மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, பாம்பே ஸ்வீட்ஸ் கு. சுப்பிரமணி சா்மா, மெஜஸ்டிக் மகாராஜா நிறுவனங்கள் எம்.எஸ். ஆசிப் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.