பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருள்கள் அழிப்பு

திருவிடைமருதூா் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீ வைத்து அழித்தனா்.

News image

புகையிலை பொருள்கள் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 3:19 am IST

திருவிடைமருதூா் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீ வைத்து அழித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் துணைக்கோட்ட காவல் பகுதிக்குள்பட்ட திருவிடைமருதூா், திருப்பனந்தாள், பந்தநல்லூா், சோழபுரம், திருநீலக்குடி, நாச்சியாா்கோவில் ஆகிய 6 காவல் நிலையங்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்த பொருள்களை திருவிடைமருதூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அழகேசன் அறிவுறுத்தலின்பேரில் திருவிடைமருதூா் மயானத்தில் குழிதோண்டி தீ வைத்து எரித்து அழித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.